1) பூமியானது அண்டத்தின் மையத்திலிருந்து எத்தனை ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது? /p>

A) 20,000

B) 25,000

C) 50,000

D) 75,000

2) விழும் மழைத் துளியின் வேகம்?

A) 9 - 10 மீ/வி

B) 10 - 15 மீ/ வி

C) 5 - 15 மீ/ வி

D) 8 -15 மீ/வி 

3) ஐந்து உலக வகைப்பாட்டு முறை R H விட்டேக்கர் என்பவரால் எந்த ஆண்டு முன்மொழியப்பட்டது?

A) 1965

B) 1966

C) 1968

D) 1969

4) நமது வயிற்று புறணி செல்கள் ..... முதல் ..... வரையிலான p H கொண்ட அமிலத்தை தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன?

A) ஒன்று,இரண்டு

B) ஒன்று, மூன்று

C) ஒன்று,நான்கு

D) ஒன்று, ஐந்து

5) சரியான கூற்று எது?

1. மரபு மின்னோட்டம் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு நேர் திசையில் அமையும்.

2. லூயிஸ் பாஸ்டியர் முதன் முதலில் நொதித்தல் என்ற நிகழ்வினை விவரித்தவர்.

3. அனைத்து புரோகேரியோட்டு உயிரினங்களும் மொனிரா உலகத்தில் அடங்கும் 

A) 1,2,3 சரி

B) 1,2 சரி

C) 2,3 சரி

D) 1,3 சரி

6) கரோலஸ் லின்னேயஸ் இரு சொல் பெயரிடும் முறையை எந்த ஆண்டு செயல்படுத்தினார்? /p>

A) 1623

B) 1723

C) 1753

D) 1733

7) பால் வளித்திரளின் விட்டம் என்பது ..... ஒளி ஆண்டுகள்?

A) 1,000

B) 10,000

C) 10,00,000

D) 1,00,000

8) எந்த ஆண்டில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் முதல் ரேயான் தொழிற்சாலை  நிறுவப்பட்டது?

A) 1950

B) 1946

C) 1813

D) 1850

9) எந்த ஆண்டில் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் கோகோ இலைகளிலிருந்து கோக்கைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்தினை பிரித்தெடுத்தார்?

A) 1800

B) 1850

C) 1860

D) 1928

10) பாலைவன கப்பல் என்று அழைக்கப்படுவது?

A) சப்பாத்தி கள்ளி

B) முள்தாவரங்கள்

C) ஆனம்

D) ஒட்டகம்

11) இவற்றுள் கொழுப்பில் கரையும் வைட்டமின் எது? /p>

A) வைட்டமின் B

B) வைட்டமின் C

C) வைட்டமின் D

D) இவை அனைத்தும்

12) கூற்று (1): வைட்டமின்கள் பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுகிறது.

கூற்று(2): வைட்டமின் B மற்றும் வைட்டமின் C நீரில் கரையும் வைட்டமின் ஆகும்.

A) கூற்று 1 சரி கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு கூற்று 2 சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

13) நெல்லிக்கனிகளில் ஆரஞ்சு பழங்களை விட எத்தனை மடங்கு அதிக வைட்டமின் C காணப்படுகிறது?

A) 10

B) 15

C) 20

D) 25

14) இப்புவியில் முதன் முதலில் உருவான செல்?

A) புரோகேரியாட்டிக் செல்

B) யுகேரியாட்டிக் செல்

C) நுண் செல்

D) ஏதுமில்லை

15) மெட்ரிக் முறை அலகுகள் (அ) திட்ட அலகுகள் ........ இல் பிரெஞ்சுக் காரர்களால் உருவாக்கப்பட்டது?

A) 1890

B) 1790

C) 1880

D) 1990

16) கூற்று (1): காலரா,டைபாய்டு நிமோனியா ஆகியவை பாக்டீரியா நோய்கள்

கூற்று(2): இன்புளுயன்சா, சாதாரண சளி, சின்னம்மை ஆகியவை வைரஸ் நோய்கள்.

A) கூற்று 1 சரி கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு கூற்று 2 சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

17) குந்தைகள் பிறக்கும் பொழுது .....க்கும் அதிகமான எலும்புகளுடன் பிறக்கின்றன?

A) 206

B) 200

C) 100

D) 300

18) எப்சம் உப்பு பற்றிய கூறுகளில் சரியானது?

1.எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும்.

2. தோல் நோய்களை தீர்க்கும் களிம்புகளில் எப்சம் பயன்படுகிறது.

3. மனித தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குகிறது.

4. விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க பயன்படுகிறது.

A) 1,2,3,4 சரி

B) 1,2,3 சரி

C) 2,3 சரி

D) 1,3 சரி

19) கூற்று (1): பாக்டீரியா ஒரு புரோகேரி யாட்டிக் நுண்ணுயிரி.

கூற்று (2): மாலைக்கண் நோய், ஸ்கர்வி, ரிக்கெட்ஸ், பெரி பெரி, குவாஷியோர்கர், மராஸ்மாஸ் ஆகியவை வைட்டமின் குறைப்பாட்டு நோய்கள்.

A) கூற்று 1 சரி கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு கூற்று 2 சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

20) இவற்றுள் செயற்கை காந்தம் எது?

1. மேக்னடைட்

2. சட்ட காந்தம்

3. லாட காந்தம்

4. வளைய காந்தம்

5. காந்த ஊசி

A) 1,2,3,4,5

B) 2,3,4,5

C) 2,3,4

D) 2,3

Post a Comment

Popular Posts

 
Top